விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தாண்டு முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள், அரசு மற்றும் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பாக கரைக்கலாம். சிலைகள் கரைக்கும் பணியின்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கடலில் பாதுகாப்பாக இறங்கவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















