கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதைத் தம் வாழ்க்கை நெறியாகக் கொண்டு மாற்றாந்தாய் மனப்பான்மையின்றி, மாற்றாருக்கும் மதிப்பளித்த பேரறிஞர். தனது புரட்சிகரமான மேடைப் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் சாமானிய மக்களைக்கூட சிந்திக்க வைத்தவர்.
சுயமரியாதையையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் துணிச்சலாக மக்களிடையே கொண்டு சென்றவர், இருமொழிக் கொள்கையை சட்டமாக்கி தமிழ்மொழியையும், தாய்மொழி உரிமையையும் பாதுகாத்தத் தொலைநோக்குச் சிந்தனையாளர்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றுரைத்து தமிழக அரசியலிலும், சமூக மாற்றத்திலும் புதிய சகாப்தத்தைப் படைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகின்றேன்.
இவ்வாறு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்





















