விநாயகர் சதுர்த்தி வரும் 14-ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதையொட்டி உள்நாட்டு விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லும் விமானக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம் வழக்கமாக ரூ.7000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.18,000 வரை உயர்ந்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள், கட்டண உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





















