சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,255-க்கு விற்பனையாகிறது
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





















