பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றிக்காக பாஜக உழைக்கும் என உறுதியளித்துள்ளார்.
வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.”எதற்காக இந்த இடைத்தேர்தல், என்ன அவசியம் வந்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். குதிரை பேரத்தால் இந்த தேர்தல் வந்திருக்கிறது.
திமுக தலைவர் பற்றி முதலமைச்சர் செய்த செயல் அநாகரிகமானது என்றும் பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அவசியமற்றது என்று கூறிய அவர், பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.





















