பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை செப்.11ஆம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்.12 மற்றும் 13ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன. நான்காவது முறையாக இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.





















