• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

September 26, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, February 9, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

by Namadhu Amma
September 26, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திசை திருப்ப ஆ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்பும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

ஆர்.கே.நகர் பகுதி 42, 47, 41, 38- ஆகிய வட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பாசறை மாவட்ட செயலாளர் ஜெஸ்டின் பிரேம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-

இயக்கத்தில் பெண்களும், இளைஞர்களும், இணைந்து சமூக நலப்பணிகளுடன் மக்கள் நல பணிகளில் தங்களை முழு நேரமாக ஈடுபடுத்தி கொள்ளும் வாய்ப்பினை உருவாக்க அம்மா அவர்களால் துவக்கப்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறையில் இணைந்து பணியாற்றியதால் பலர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் மக்கள் பணிகளை மேற்கொண்டனர்.

அம்மா அவர்களது வழியில் எடப்பாடியார் அதனை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கழக ஆட்சியில் பெண்கள் சமுதாயத்தை மேம்படுத்த சுயமாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டது.

கிராமப்புற, நகர்ப்புறங்களில் சுயமாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி உதவிகளை வழங்கியவர் எடப்பாடி கே.பழனிசாமி என்பதை யாரும் மறுத்து விடமுடியாது. கழக ஆட்சியில் அவர் சிறப்பாக செயல்பட்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார். அதனால் 1500 மாணவர்கள் தற்போது பயன் அடைந்து வருகின்றனர்.

ஜாதி, மதங்களை கடந்து இன்றைய சமுதாய சீரழிவை மாற்ற இளம் தலைமுறையினர் இளைஞர்களும், இளம்பெண்களும், கட்சி பணியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும், சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என வரலாறு படைக்க வேண்டும். தீயசக்தி தி.மு.க.வினரை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்த பொதுமக்களின் இன்றைய நிலை கேள்விக்குறியாகி விட்டது.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக கழக பணிகளை மேற்க்கொண்டு தொடர்ந்து கட்சி பணியாற்றும் தாம் ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களோடு இணைந்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன்.

குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிகள் செய்துள்ளேன். கல்லூரி படிப்புக்கும் இடஒதுக்கீடு பரிந்துரை மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை, முதியோர், மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை, சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் என தனது மக்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளேன்.

ஆனால் ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணிகளை அறவே தவிர்த்து விட்டு மாநகராட்சி, மற்றும் அரசு கான்ட்ராக்டர் டெண்டர் பணிகளில் கரப்சன், கலெக்சன், வாங்குவதிலேயே குறியாக உள்ளனர். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகள் தான் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

சொத்து வரி, மின் கட்டண உயர்வை திசை திருப்ப அ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்போம். வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து மக்கள் மீது பெரும் சுமையை சுமத்திய தீயசக்தி தி.மு.க.வை விரட்ட இளம் தலைமுறையினர் கழக நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எடப்பாடியாரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மீண்டும் கழக ஆட்சி அமைய உழைப்போம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இந்த கூட்டத்தில் எம்.என்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், ஏ.கணேசன், டி.டீ.ஜனார்த்தனன், எஸ்.ஆர். அன்பு, ஜேசிபிஎஸ்.சுரேஷ், எம்.சீனிவாசன், ஏ.வினாயகமூர்த்தி, சண்முகவினாயகம், எம். நாகூர் மீரான், ஏ.கே.சந்திரசேகர், டி.தயாளன், பி.கோவிந்தராஜ், ஆர்.வேல்முருகன், எம். ராமமூர்த்தி, பி.கே.யுவராஜ், மரக்கடை விஜி, கே.ஆர்.வீரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.