• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு

September 21, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு

by Namadhu Amma
September 21, 2022
in தற்போதைய செய்திகள்
0
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலூர்,

தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார்.

கடலூர் தெற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காடாம்புலியூர் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.கோவிந்தராஜ், நெய்வேலி நகர செயலாளர் க.கோவிந்தராஜ், மாவட்ட கழக பொருளாளர் கே.தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானச்செல்வி, கல்யாணசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் பி.குருநாதன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் இரா.இராஜசேகர், தகவல் தொழில் நுட்ப பிரிவு கோவை மண்டல துணைத்தலைவர் எஸ்.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.கமலக்கண்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன், கழக அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசியதாவது:-

அண்ணாவின் பெயரை கொண்டு நமது கழகத்தை ஆரம்பித்த புரட்சித்தலைவர் நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்தார். அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் நிறுத்த முடியாத திட்டமாக இருந்தது. அதேபோன்று புரட்சித்தலைவியும் தமிழக மக்களுக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா லேப்டாப் போன்ற நல்ல பல திட்டங்களை கொடுத்தார். அவர் வழியில் வந்த எடப்பாடியாரும் குடிமராமத்து திட்டம், மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தந்து மக்கள் மனதில் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக நிலைத்து நிற்கின்றார்.

எடப்பாடியார் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு அதன்படி நாம் இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஸ்டாலின் ஊடகங்களை வைத்து பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்றார்.

ஒரு அனிதா இறந்ததற்கு ஒப்பாரி வைத்த ஊடகங்கள் என்று 16க்கும் மேற்பட்ட மாணவிகள் நீட் தேர்வால் இறந்திருக்கின்றனர். இதை எந்த தொலைக்காட்சியாவது செய்தி வெளியிடுகின்றதா. இந்த ஆட்சி கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்களை நிறுத்துவதும், கழகத்தினர் மீது பொய் வழக்கு போடுவதும் போன்ற வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றது. திமுகவில் தற்போது நான்கு முதலமைச்சர் உள்ளார்கள் இவர்கள் தமிழ்நாட்டை கொள்ளையடித்து தங்கள் குடும்பத்தை மேலும் எப்படி உலக கோடீஸ்வரர் வரிசையில் கொண்டு சேர்ப்பது என்பதை மட்டுமே எண்ணிப் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். இந்த கொள்ளை கூட்டத்தின் தலைவனாக ஸ்டாலின் உள்ளார்.

குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறினாரே ஸ்டாலின் என்னானது?. தேர்தல் வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றி இருக்கின்றரா. நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். தமிழகத்தில் வேளாண் மண்டலம் அமைத்து விவசாயிகளை பாதுகாத்தவர் எடப்பாடியார். நீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளி மாணவர்களை மருத்துவம் படிக்க வைத்து அழகு பார்த்தவர் எடப்பாடியார். திடீரென்று ஸ்டாலின் போல் அரசியலுக்கு அதிர்ஷ்டத்தால் வந்தவரா எடப்பாடியார். இல்லை சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினராகி, வாரிய தலைவராகி, நாடாளுமன்ற உறுப்பினராகி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து முதலமைச்சராகி இப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டிருக்கின்றார்.

அண்ணா மறைவுக்குப்பின் நாவலர் முதல் இடத்தில் இருந்தபோது ராமாபுரம் தோட்டத்தில் ரகசியமாக எம்ஜிஆர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற நயவஞ்சகன் நச்சுப் பாம்பு கருணாநிதி தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்து உலக பணக்காரர் வரிசையில் விட்டுவிட்டு சென்றிருக்கின்றார். அந்த கருணாநிதிக்கு 134 அடியில் பேனா சிலை தமிழக அரசின் சார்பில் ஸ்டாலின் வைக்க போகிறார்.

இதை அண்ணாவுக்கு வைக்க வேண்டுமா கருணாநிதிக்கு வைக்க வேண்டுமா. இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலத் திட்டங்களை கொடுத்தவர்கள் புரட்சித்தலைவரும், அம்மாவும், எடப்பாடியாரும். அப்படிப்பட்ட நம்மை மக்கள் எப்படி மறப்பார்கள். தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். கழகத்தின் அடிமட்ட தொண்டன் தற்போது தலைமைப்பொறுப்பில் இருக்கின்றார். நாம் விசுவாசமாக பணியாற்றினால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.வி.குமரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏ.ஜி.கே.கல்யாணசுந்தரம், டி.பிரபு, கே.எஸ். சட்டநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிலில் ஒன்றிய கழக துணைச்செயலாளர் ஆர்.எஸ்.அண்ணாமலை நன்றி கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.