• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

September 19, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு,

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பம்மல் வடக்கு பகுதி கழகம் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் பம்மலில் நடைபெற்றது.
பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வெ.ஜெகநாதன் தலைமை வகித்தார்.

பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் பா.அப்பு (எ) வெங்கடேசன், பகுதி அவைத்தலைவர் துரை தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பி.ஆர்.எஸ்.சரவணராஜ், முன்னாள் கவுன்சிலர் தா.முகுந்தன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் டி.கே.கலா, வண்ணை ஆர்.சேகர், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசியதாவது:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை நடத்தும் அருகதை கழகத்திற்கு மட்டுமே உண்டு. அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை தனது இதயக்கனி என்று குறிப்பிட்டு தனது இதயத்தில் வைத்திருந்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தவுடன் அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரிலும், பேரறிஞர் அண்ணாவின் உருவத்தை கட்சி கொடியிலும் பதித்து அண்ணாவின் மீது தனக்கு உள்ள பற்றினை வெளிப்படுத்தினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தார். அதேபோல் இதயதெய்வம் அம்மா பேரறிஞர் அண்ணாவின் நூல்களை அரசுடமைக்கு பேரறிஞர் அண்ணாவின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார்.

1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான் கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்தேன். தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து வந்தேன். இது மத்திய அரசு பணியாகும். அப்போது “தம்பி வா! தலைமையேற்க வா! தேர்தல் களத்திலே உன்னுடைய பணியினை பார்க்க வேண்டும். புறப்பட்டு வா..” என்று பேரறிஞர் அண்ணா எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.

உடனே அந்த கடிதத்தைக் கொண்டுபோய் தலைமை பொறியாளரிடம் கொடுத்து தேர்தல் பணியாற்ற விடுமுறை கேட்டேன். அதற்கு அவர்கள் விடுமுறை அளிக்க மறுக்கவே, எனது மத்திய அரசு பதவியினை ராஜினாமா செய்து தேர்தல் களத்திலே பணியாற்றினேன்.

அப்போது நடைபெற்ற தேர்தலில் கழக வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம். இதனை நான் எப்போதும் பெருமையாக நினைக்கிறேன்.சாதாரண தொண்டனாக இருந்த எனக்கு அம்மா எனக்கு வஃபு வாரியத் தலைவராக பதவி வழங்கினார். இன்று கழக அவைத்தலைவராக இருக்கிறேன். இத்தகைய நிகழ்வு வேறு எந்த இயக்கத்திலாவது பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியவே முடியாது.

ஒரு சாதாரண தொண்டன் மிகப்பெரிய பதவிக்கு வர முடியும் என்றால் அது கழகத்தில் மட்டுமே நடக்கும். வேறு எந்த இயக்கத்திலும் நடக்காது. தி.மு.க.வில் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைய தினம் தமிழகத்தை ஆளுவது ஒரு முதலமைச்சர் அல்ல. ஸ்டாலின் மகன், மருமகன், மனைவி என்று குடும்பமே ஆட்சி செய்கிறது.

கருணாநிதி எப்படிப்பட்டவர் என்பதனை கவிஞர் கண்ணதாசன் வனவாசம் என்னும் புத்தகத்தில் தெளிவாக விவரமாக எழுதி வைத்திருக்கிறார். அந்த புத்தகத்தை படித்தால் போது கருணாநிதி எப்படிபட்டவர் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கழகத்தை சிறப்புடன் வழிநடத்தி வரும் எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளர் அல்ல.

நிகழ் காலத்திலும் பொதுச்செயலாளர், எதிர்காலத்திலும் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும். இது உறுதி.

இவ்வாறு கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.