• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

தொழில் துவங்க விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது

April 20, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தொழில் துவங்க விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது

by Namadhu Amma
April 20, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி, தளி தொகுதி, ஓசூர் தொகுதிகளில் தொழில் துவங்குவதற்காக விவசாயிகளினுடைய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களாவர்கள் அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதி, தளி தொகுதி, ஓசூர் தொகுதி ஆகிய 3 தொகுதிகள் கடல் மட்டத்திலிருந்து அமார் 1,000 மீட்டர் உயரத்தில் இருக்கின்ற காரணத்தால், அப்பகுதிகள் எப்போதும் குளிர்ப் பிரதேசமாகவே இருக்கின்றன.

அப்படி குளிர் பிரதேசமாக இருக்கின்ற அந்த மூன்று தொகுதிகளில் மலை பிரதேசங்களில் விளையக்கூடிய விவசாய விளைபொருட்கள், அது காலிஃபிளவராக இருந்தாலும் சரி, அது சௌசௌவாக இருந்தாலும் சரி, கேரட்டாக இருந்தாலும் சரி, உருளைக்கிழங்காக இருந்தாலும் சரி, அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாக இருக்கின்றன.

அதுமட்டுமல்ல, பசுமைக்குடில்கள் அமைத்து, அங்கே மலர்களை தயார் செய்கின்றனர். அங்கே கிட்டத்தட்ட 75 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விவசாயிகள் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த பசுமைக் குடில்களில் விளைகின்ற மலர்கள் ஆசியா கண்டத்திற்கு மட்டுமல்லாமல், ஐரோப்பியா கண்டத்திற்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அப்படி ஏற்றுமதி செய்கின்ற அந்தச் சூழலில், ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி அந்நிய வருவாயாக வருகிறது. இப்படி, அந்த விவசாயத்தையே நம்பி கொண்டிருக்கிற அந்த விவசாய பெருமக்கள் அந்த மண்ணையே தன்னுடைய தாயாக நினைத்து வாழ்கின்ற அந்த விவசாயிகளினுடைய நிலங்களை தொழில் துவங்குவதற்காக கையகப்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சரையும்,, தொழில் துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த இடத்தில் இதை குறிப்பிடுவதற்கு காரணம், ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில்கள் நிறைந்த மாவட்டம். சிறு தொழில்களில், கிட்டத்தட்ட 5,0000 தொழிற்சாலைகள் இருக்கின்றன.

பெருந்தொழில் என்றால் 100 தொழிற்சாலைகளுக்கு மேல் இருக்கின்றது. ஏற்கனவே கடந்த ஆட்சிக் காலத்தில் நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் அங்கே மூன்றாவது சிப்காட்டுக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதோடு ஓசூரிலேயிருந்து போடப்பட்டிருக்கிறது. தருமபுரிக்கு செல்கின்ற நான்குவழிப் பாதை இப்போது ஏற்கெனவே நம்முடைய உறுப்பினர் கே.பி.அன்பழகன் கூட அமைச்சரிடம் கேள்வி கேட்டபோது தருமபுரியிலே கடந்த ஆட்சியில் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிலே 1,200 ஏக்கர் அரசு நிலம். மீதியுள்ள 500 ஏக்கர் மற்றவர்களுக்கு சொந்தமான நிலம். அதை எப்போது நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எனவே, ஏற்கனவே வளமாக இருக்கின்ற இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழில் துறையில் வலமாக இருக்கின்ற
கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் அங்கேயிருக்கின்ற விவசாயிகளையும் நீங்கள் வளமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அங்கே விளைகின்ற மலர்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு ஏல மையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்.

அந்த விவசாயிகளினுடைய கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி 20 கோடி ரூபாய் செலவு செய்து, சர்வதேச மலர் ஏல மையத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

அநேகமாக ஆசியா கண்டத்திலேயே அது ஒன்று தான் சர்வதேச அளவிலே நடக்கக்கூடிய ஏல மையமாக இருக்கும். அந்த மையம் ஆன்லைனில் வந்திருக்கிறது.

அவ்வளவு உயர்வான நிலையிலே அங்கே விவசாயம் செய்கின்ற அந்த விவசாய பெருமக்களினுடைய உணர்வுகளை மதித்து, அவர்களை காப்பாற்ற வேண்டுமென்று மீண்டும்
உங்களிடத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.