• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

April 18, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

by Namadhu Amma
April 18, 2022
in தற்போதைய செய்திகள்
0
தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 17.4.2022 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருஉருவ சிலைக்கும், சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.

இதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும், அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம்,

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.பி.சிவசுப்பிரமணி, கழக அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ச.பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ரமணீதரன், முன்னாள் எம்.பி.க்கள் செல்வகுமார சின்னையன், சத்தியபாமா, மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம்,

ஒன்றிய கழக செயலாளர்கள் கதிர்வேல், அருள் ஜோதி செல்வராஜ், கலைமணி, ரஞ்சித் ராஜ், விஜயன், சக்திவேல், தனசேகர், முனியப்பன், ஜெகதீஷ், மேகநாதன், வழக்கறிஞர் துரை சக்திவேல், விவேகானந்தர், சிவகிரி பி.டி.ராமலிங்கம், கொடுமுடி பி.பரமசிவம், கவுதம்,

ஒட்டப்பாறை ஊராட்சி தலைவர் சுமதி தங்கவேல், யூனியன் சேர்மன் கணபதி உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள நினைவுத்தூண் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, கழக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரராஜன், ராஜமுத்து, மணி, பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.