• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech

நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாம் போட்டு விட்டார் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாட்டையடி

April 7, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாம் போட்டு விட்டார் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சாட்டையடி

by Namadhu Amma
April 7, 2022
in தற்போதைய செய்திகள்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல்

பத்து மாத தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டாலின் பட்டை நாமம் போட்டு விட்டார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

சொத்து வரியை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.பி.நடராஜ், வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், கழக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சுப்புரத்தினம், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

தி.மு.க ஆட்சியில் கடந்த 10 மாத கால ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? இந்த ஆட்சியில் செய்த சாதனைகள் என்னவென்றால் திருப்பதி வெங்கடாஜலபதி நெற்றியில் இருக்கிற பட்டை நாமம் தான் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இது தான் உண்மை. வேறு எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்திலும் ஸ்டாலின் தான் வந்து கொண்டு இருக்கிறார். வேறு எந்த செய்திகள் இருக்கிறதா என்றால் கிடையாது. அதை திறந்தார், இதை திறந்தார் எனதான் செய்தி வருகிறது. ஆனால், கழக ஆட்சியில் பணிகளை மேற்கொண்டால் இதுவெல்லாம் நாடகம் என ஸ்டாலின் கூறினார்.

கழக ஆட்சியில் சொத்து வரி விதித்த போது இது மக்களை பாதிக்கும் என நீலிக் கண்ணீர் வடித்தனர். 2018-ம் வருடம் வரி விதித்த சொத்து வரியை நீக்கி விட்டு பணம் திருப்பி செலுத்தப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சியில் 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வரி நிறுவனங்களுக்கு 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வரி உயர்த்த சொல்லியதாக, மக்களை ஏமாற்றுகின்றனர். வரி உயர்வினால் பணவீக்கம், விலை உயர்வு ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்,

கடந்த 10 வருட கால கழக ஆட்சியில் சொத்து வரியோ, விலைவாசி உயர்வோ ஏற்றவில்லை. வரி விதிப்பதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், அம்மா ஆட்சியில் முதலமைச்சர் எந்த வரியையும் விதிக்க வேண்டாம் என அந்த குழுவுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு 150 சதவீதம் வரை வரியை உயர்த்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் மக்களை மடையர்களாக நினைத்து தி.மு.க மோசமான ஆட்சி நடத்தி வருகிறது என்பதை காட்டுகிறது.

கடந்த 10 மாத கால தி.மு.க ஆட்சியை பற்றி சட்டசபையில் கழக ஒருங்கிணைப்பாளரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் பேசுகையில் அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், நீட் தேர்வுக்கு விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, கூட்டுறவு வங்கிகளில் வைத்த நகைக்கடன்கள் தள்ளுபடி, மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு,

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல் இவ்வாறு தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லையென ஸ்டாலினிடம் நேருக்கு நேர் கேட்டார்கள். ஆனால் அதற்கு அவர் சரிவர பதில் கூறவில்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தினந்தோறும் தி.மு.க வின் கொடுமையான ஆட்சியில் நடைபெறுகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தி.மு.க வினர் தான் என ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் மறைப்பதற்காக மக்களுக்கு சேவை செய்வது போல் நாடகமாடுகிறார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க விற்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக, நீதியாக நடந்ததா என்றால் இல்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

தி.மு.க.விற்காக உழைத்தவர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. வெளியூர்களிலிருந்து வந்தவர்களை பணம் வைத்திருப்பவர்களே வேட்பாளர்கள் என அறிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரு தி.மு.க அமைச்சர்களும் தில்லு, முல்லு செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

எம்.எல்.ஏ தேர்தலில் ஒட்டன்சத்திரத்தில் ரூ.2000 வரை கொடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மறு தேர்தல் வைத்தால் கழகம் மகத்தான வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். மக்கள் வயிற்றில் அடிக்கின்ற தி.மு.க ஆட்சி ஒழிவதற்கு, அழிவதற்கு கழக நிர்வாகிகள் சபதம் ஏற்று உறுதிமொழி எடுப்போம்.

இவ்வாறு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.