• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

February 10, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

by Namadhu Amma
February 10, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க.வின் செல்வாக்கு சரிவு; கழகத்தின் செல்வாக்கு உயர்வு -அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர்- முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பத்தூர்,

மக்களிடம் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்து கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கூறினர்.

ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், பேரூராட்சி மற்றும் நகராட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருமுல்லைவாயலில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் திண்டு உத்தமராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் ஆவடி மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர்களான கழக அமைப்பு செயலாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்கள் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-

இந்த தேர்தலில் நாம் விட்டதை பிடிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவப்பெயரை சந்தித்துள்ள தி.மு.க. மக்களிடம் தன் செல்வாக்கை இழந்து நிற்கிறது. ஆனால் கழகத்தின் செல்வாக்கு மக்களிடம் மளமளவென உயர்ந்து காணப்படுகிறது. எனவே நீங்கள் தி.மு.க.வின் சரிந்த செல்வாக்கை கழகத்தின் ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். திமுகவினர் உங்களை மிரட்டினாலும் அல்லது வேறு வகையில் தொந்தரவு செய்தாலும் கழகம் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசும்போது:-

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். வீதி வீதியாக, வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பில் கெட்டுப் போன பொருட்களை கொடுத்த தி.மு.க.வின் முகத்திரையை கிழிக்க வேண்டும். ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர் கழக உறுப்பினர் தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அம்பத்தூர், திருநின்றவூர், திருவேற்காடு என அனைத்து பகுதிகளிலும் கழக வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் அயராது பாடுபடுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் திருமுல்லைவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கழக வேட்பாளர்களை அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் அறிமுகம் செய்து வைத்து பேசினார். உடன் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உள்பட பலர் உள்ளனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.