• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

January 29, 2022
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

பணி நிரந்தரம் கோரி சென்னையில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

October 5, 2026
வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

வள்ளலார் பிறந்தநாள்: திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளாரை போற்றி வணங்கிய எஸ்.பி. வேலுமணி!

October 5, 2026
சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

சென்னை கோட்டையில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம்–கடற்கரை சேவை பாதிப்பு!

October 5, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

October 5, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

October 5, 2026
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

October 3, 2026
தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 3, 2026
அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

அக்டோபர் 11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி: பயணத் திட்டம் வெளியீடு

October 2, 2026
வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து

October 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, October 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

by Namadhu Amma
January 29, 2022
in தற்போதைய செய்திகள்
0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் கொளப்பாக்கத்தில் சென்னை புறநகர், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்கள் கே.பி.கந்தன், எம்.கே.அசோக் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கழக ஆட்சியின்போது சென்னையில் அம்மா அவர்கள் கொண்டு வந்த மழை நீர் சேமிப்பு திட்டம், பல்வேறு சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன.

சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்தது அம்மா அரசு. அதனைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தினார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கழக அரசின் திட்டங்களை மக்கள் நினைக்க தொடங்கி விட்டார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை புறநகர் மாவட்டம் மற்றும் தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 47 வார்டுகளிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கும் அனைவருமே திறமைசாலிகள்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இதயதெய்வம் அம்மா அவர்கள் தான் கழக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நமக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே போதும் இத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி விடலாம்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசியதாவது:-

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர். சென்னை மாநகராட்சியினை பற்றி நன்கு அறிந்தவர். ஆகையால் அவரின் வழிகாட்டுதல் தி.மு.க.விற்கு சிம்மசொப்பனமாக இருக்கும்.

மு.க.ஸ்டாலின் கதிகலங்கி உள்ளார். கொங்கு மண்டலத்தை போல் சென்னை மாநகராட்சியின் அனைத்து தொகுதிகளிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுவார். நடைபெற இருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் நாம் சரித்திர சாதனை படைப்போம்.

இவ்வாறு கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.