• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

January 21, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, August 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

by Namadhu Amma
January 21, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் கழகத்தை அழித்து விட வேண்டும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஒரு மாயையை அதாவது ஒரு செயற்கையான தோற்றத்தை
உருவாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட முனைப்போடு காவல்துறையை ஏவிவிட்டு முன்னாள் அமைச்சர்களை பழிவாங்குகின்ற ஒரு செயலை இந்த விடியாத தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த பொங்கல் பண்டிகைக்கு 21 வகை
பொருட்கள் தருவதாக அறிவித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் சமூக வலை தளங்களிலும், சில ஊடகங்களிலும் எந்த அளவுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வெறுத்து மக்கள் சாலையில் கொட்டினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பொங்கல் பரிசு என்பதைவிட குப்பையைத்தான் கொடுத்தார்களே தவிர பொங்கல் பரிசை அளிக்கவில்லை. உருகிய
வெல்லம். மிளகு என்ற பெயரிலே பருத்திக்கொட்டை. கலப்பட மஞ்சள் தூள், கலப்பட சீரகத்தூள், புளியில் பல்லி, பிளாஸ்டிக் கவர் இப்படி குப்பைகளாக 21 பொருட்களை அளித்தார்கள்.

தமிழக மக்கள் இந்த விடியா தி.மு.க. அரசை கேவலமாக
திட்டும் நிலையில் அதனை திசை திருப்பி மக்கள் மத்தியில் அதனை மறக்கடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக புது புது
யுக்திகளை கோயபல்ஸ் பாணியில் விடியா திமுக அரசு கையாண்டு வருகிறது.

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடுமா? அதுபோல ரெய்டு என்ற போர்வையில் காவல்துறையை ஏவிவிட்டு கழகத்தின் புகழக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். அது முடியாது. நாங்கள் சொல்கிறோம். மக்கள்
எதிர்பார்க்கிறார்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராணியிருந்தால் சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த தயாரா? தேர்தல் நடத்தினால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வர முடியாது. அந்த அளவுக்கு கடுமையாக, வேதனையான அதிருப்தியை இந்த 8 மாதத்தில் சம்பாதித்து இருக்கிறது. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அத்தனையும் காற்றில் பறக்கவிட்டு, மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஒரே ஒரு பணியாக இன்றைக்கு பழிவாங்கும் செயலை செய்தால் நிச்சயமாக அதனை சந்திப்போம். எத்தனையோ சவால்களை, சோதனைகளை, எத்தனையோ அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து மாபெரும் வெற்றி கண்ட இயக்கம் கழகம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ல் இயக்கத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து கழகம் எத்தனையோ சோதனையை சந்தித்தது. ஆனால் அத்தனை சோதனைகளையும் தாங்கி, ஒரு சாதனை படைத்த மாபெரும் இயக்கம் கழகம். எனவே இந்த ரெய்டு, காவல்துறையை ஏவிவிடுதல் போன்றவற்றை வைத்து கழகத்தை அடக்கி விடலாம் என்று நினைத்தால் அவர்கள் நினைப்புதான்
மண்ணை கவ்வும். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

கேள்வி:- கேள்வி கேட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டு வருகிறார்களே?
பதில்:- கருத்து சுதந்திரம் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பேசியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு கருத்து சுதந்திரத்தை காலில்
போட்டு மிதித்து இந்த ஆட்சிக்கு எதிராக, தி.மு.க.வுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சரி அவர்களை கைது செய்து அடைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார் என்பதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் மகன் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அந்த கொலை பழியை இவர்கள் தான் ஏற்கவேண்டும்.

அப்படி என்றால் கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அர்த்தமா? இப்போது கூட நாங்கள் இருக்கும் இடத்தில்
தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் குடியிருக்கிறார். அவர் இங்கு வாடகையில் இருக்கிறார். இங்கும் வந்து அவருக்கு தொடர்பு உள்ளதாக என்று சோதனை நடத்தியுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் ரெய்டு என்றால்
யாருமே கருத்து சொல்ல முடியாத நிலை உள்ளது என்றுதான் அர்த்தம்.

ஒரு மினி எமர்ஜென்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அடிப்படை உரிமை தி.மு.க. ஆட்சியில் மறுக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள 18 பிளாட்டில் உள்ளவர்கள் உள்ளே இருந்து வெளியே வரமுடியவில்லை. சுதந்திரமாக தன்னுடைய கடமையை செய்ய முடியவில்லை என்றால் எந்த அளவுக்கு தமிழகத்திலே தனி மனிதனின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுள்ளது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது.

கேள்வி:- மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:- எத்தனையோ அடக்குமுறையை பார்த்தவர்கள் நாங்கள். பூச்சாண்டிகளை பார்த்து அஞ்சும் இயக்கம் கழகம் அல்ல. வாருங்கள் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். நாங்கள் அது குறித்து கவலைப்படவில்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.