தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 87 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றவும் பொதுமக்களிடம் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.





















