தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தேசிய அளவில் சிறப்பான அங்கீகாரம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை, எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அவர்களின் சாதனை மற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.





















