சென்னை:
தமிழகத்தில் போதை ஒழிப்புக்கு 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், அதற்காக ரூ.264.14 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 12 போதைப்பொருள் தடுப்புப் படைகள் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் இந்தப் படைகள் மூலம் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 65 இன்ஸ்பெக்டர்கள், 130 சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 325 போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்று இருப்பார்கள். இதற்காக ரூ.264.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.





















