வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு என்பது கடல் பகுதியில் புயல் உருவாகக்கூடிய வானிலைச் சூழல் ஏற்பட்டிருப்பதைக் குறிக்கிறது. துறைமுகத்திற்கு உடனடி பெரிய ஆபத்து இல்லாவிட்டாலும், கடல் மற்றும் காற்றின் நிலை மோசமடைய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்தக் கூண்டு ஏற்றப்படுகிறது.
இதையடுத்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.





















