அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள் அறிக்கை வருமாறு:
நடந்து முடிந்த 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்து கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி விவகாரங்களில் அதிருப்தி 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வலியுறுத்தியதாகவும், அந்த வாய்ப்பு பயன்ப டுத்தப்படாததால் பல பாதிக்கப்பட்டதாகவும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதேபோல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் இடம்பெற்ற தே.மு. தி.க.. புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி அமைக்காததும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர். தலைமையுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படவில்லை என்றும், இதன் காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பா.ம.க . கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்திருந்தபோதிலும், உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் கூட்டணி வாய்ப்பு கைநழுவியதாகவும் குற்றம்சாட்டினர்.
2026 தேர்தலிலும் கூட்டணி வாய்ப்புகள் தவறியதாக புகார்
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்ளவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு களும் பயன்படுத்தப்பட வில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 தாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், தொடர் முடிவுகளால் ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.





















