தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார்.
அதன்படி, டாஸ்மாக்கில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ஊதிய விகிதத்தின்படி, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.





















