காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநிலம் கபினி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் தருவாயில் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 543 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 311 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 78.69 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















