திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொட்டையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களில் 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மாணவர்களின் உடல்நல பாதிப்புக்கு அதுவே காரணமா என்பது அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே உறுதியாகும்.
சம்பவம் தொடர்பாக பள்ளியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் அதன் தயாரிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















