சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.
உயிரிழந்தவர்களின் பெயரில் இருக்கும் கேஸ் இணைப்புகள், ஒரே முகவரியில் இருக்கும் போலி மற்றும் கூடுதல் எரிவாயு இணைப்புகளை கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிகளை கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நேற்று ஆகஸ்ட் 16ஆம் தேதிதான் கடைசி நாள் என்று கூறிய நிலையில் தற்போது அதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.





















