தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ,2,60,000க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





















