• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

August 10, 2026
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

October 21, 2026
தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

தனியார் வசமாகும் சென்னை விமான நிலையம்? – மத்திய அரசு தீவிர பரிசீலனை!

October 21, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

காவலர் வீரவணக்க நாள்: உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி!

October 21, 2026
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது – 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே நடைபெற வாய்ப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது – 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகே நடைபெற வாய்ப்பு

October 21, 2026
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – நவம்பர் 1ஆம் தேதி தேர்வு!

October 21, 2026
மின்வெட்டை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல்

மழைக்காலங்களில் மின்விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் – தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

October 21, 2026
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

October 21, 2026
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து!

October 20, 2026
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

October 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 21, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்|மற்றவை

தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

by admin1
August 10, 2026
in சிறப்பு செய்திகள்|மற்றவை
0
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 14.8.2026 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறும் என்று கழகப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித்தமிழர்’ எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கழகப் பொதுச்செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித்தமிழர்’ எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

2026, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்குமேல்நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது. மேற்கண்டவாறு. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது,விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும்; அப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க்கடன்முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர,

பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்: கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்: கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்: உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின்

முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெறஉள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித்தமிழர்’ எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Share196Tweet123
admin1

admin1

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக காவல் நிலையங்களுக்கான செலவின நிதி அதிரடி உயர்வு – ரூ.71 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு!

October 21, 2026
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு – 3,897 பேரின் விவரங்கள் வெளியானதாக வங்கி உறுதி

October 21, 2026
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

October 21, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.