சென்னை கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் துவங்கியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்காத நிலையில் துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் பங்கேற்றுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள், சிக்கல்களுக்கு சுமுக தீர்வு காணும் நோக்கத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர் பகிர்வு, மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என எதிர்பாரக்கப்படுகிறது. உட்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் முதலீடுகள், சுற்றுலா வளர்ச்சி ஆகியவை குறித்தும் முதல்வர்கள் விவாதிப்பர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















