தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் மலிவு விலை மளிகைத் தொகுப்பு அறிமுகம்
சென்னை, அக். 29:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை நாளை (அக்டோபர் 30) தொடங்க உள்ளது.
இந்த மளிகைத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட 10 பொருட்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்குத் தேவையான இனிப்புகள் மற்றும் பலகாரங்களைத் தயாரிக்க உதவும் வகையில் இந்தத் தொகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது.





















