80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர தின விழா 2026 முதலாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சி ஒத்திகைகள் இன்றும், வருகின்ற ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்றில் இருந்து மூன்று நாட்கள் சுகத்திரத்தின ஒத்திகையானது சென்னை தலைமை செயலத்தில் இருக்கக்கூடிய கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதலாவது ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் துப்பாக்கி ஏந்தி காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர். காலாட்படை, குதிரைப்படை முதற்கொண்டு பல்வேறு படைகளுடைய அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகையும் நடைபெற்றது.




















