பலூன் ஊதிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பலூன் துண்டு தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார்-சத்தியா தம்பதியினரின் 6 வயது சிறுவன் சோம்நாத் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பலூனை ஊதியபோது, எதிர்பாராத விதமாக பலூன் தொண்டைக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுவனை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
பலூன் போன்ற சிறிய பொருட்களுடன் குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர் மற்றும் பெரியவர்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக பலூனை குழந்தைகள் தாங்களாகவே ஊதுவதைத் தவிர்க்கச் செய்வதுடன், பலூன் வெடித்தால் அதன் துண்டுகளை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















