ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்று வரும் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் காஜல் தோச்சக் மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் சீனாவின் ஜிங்ரு சன்னை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் காஜல் தொடர்ந்து 2-வது முறையாக யு20 உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த ஆண்டு 72 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றிருந்த அவர், இந்த ஆண்டு 76 கிலோ பிரிவுக்கு மாறியும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளார்.
காஜலுடன் இந்தியாவின் தனு சர்மா மற்றும் சவிதா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். யு20 உலக அளவில் 2 முறை தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளில் காஜலும் இணைந்துள்ளார்.





















