டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது. சேலம் அணியின் பந்துவீச்சை சமாளித்து இலக்கை எட்டும் முனைப்பில் திருப்பூர் அணி விளையாடி வருகிறது.





















