திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர சாலகட்ல பிரம்மோற்சவ விழாவில், 8 நாட்களில் உலகம் முழுவதிலும் இருந்து 5.76 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த 8 நாட்களில் பக்தர்கள் உண்டியல் மூலம் மொத்தம் ரூ.28.94 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், பக்தர்களுக்கு 33 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 21.84 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 2.04 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இந்த விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் செயல் அதிகாரி ரவிச்சந்திரா ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.





















