• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
படங்களைத் திரையரங்கு சென்று பாருங்கள்: நடிகை ரித்விகா !

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி – இயக்குநர் பாலாஜி

September 24, 2026
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

October 6, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

செவிலியர்கள் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 6, 2026
ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

October 6, 2026
அக்டோபர் 16-ல் வெளியாகும் ஃபேன்​டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’

அக்டோபர் 16-ல் வெளியாகும் ஃபேன்​டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’

October 6, 2026
காதல்… கட்டுப்பாடு… பயம்!

காதல்… கட்டுப்பாடு… பயம்!

October 6, 2026
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

October 6, 2026
தனியார் பால் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராடிய செவிலியர்களை கைது செய்வதா? – அன்புமணி கண்டனம்

October 6, 2026
மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

மூதாட்டியிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை – தேர்தல் அலுவலர் மாற்றம்

October 6, 2026
“வண்டலூர் பள்ளி மாணவி புகார்: ‘காவல் துறை செயல்படும் லட்சணம் இதுதானா?’ –அதிமுக பொதுச் செயலாளர்  கேள்வி”

“செவிலியர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை கொடூரத்தின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி காட்டம்

October 6, 2026
சிக்மா – திரைவிமர்சனம்

சிக்மா – திரைவிமர்சனம்

October 5, 2026
நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ போஸ்டர்!

October 5, 2026
“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

“அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை வெளியாகிறது TNPSC குரூப்-4 அறிவிப்பு!”

October 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home Entertainment Movie

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி – இயக்குநர் பாலாஜி

by Admin
September 24, 2026
in Movie
0
படங்களைத் திரையரங்கு சென்று பாருங்கள்: நடிகை ரித்விகா !
498
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலாஜி இயக்கத்தில் அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பும், சக்தி பாலாஜி இசையும் அமைத்துள்ளனர்.

சிறு முதலீட்டில் உருவான இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “படம் வெளியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பார்த்தேன். நல்ல த்ரில்லராக உருவாகியிருப்பதாக இயக்குநர் பாலாஜியிடம் தெரிவித்தேன். பல படங்கள் வெளியாகும் சூழ்நிலையிலும் ‘தி டார்க் ஹெவன்’ வெற்றி பெற்றிருப்பதற்கு ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் அளித்த ஆதரவுதான் காரணம்.

பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மத்தியில் சிறிய பட்ஜெட் படமாக வெளியாகி வெற்றி பெற்றிருப்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம். படத்தின் 60 முதல் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் நடிகர் ஒருவர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது, படத்தை நிறுத்திவிட்டு வேறு முடிவை எடுப்பது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு எளிதான முடிவு அல்ல.

அந்த சூழலில் சித்து ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது. அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே அனைத்து விஷயங்களையும் பேசி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்தில் ஆறு, ஏழு படங்கள் வெளியாவதும், சில வாரங்களில் படங்கள் வெளியாகாமல் இருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளியிடாத வகையில் முறையை கொண்டு வர வேண்டும். சிறு முதலீட்டுப் படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இந்தப் படத்திற்கு பிவிஆர் சினிமா வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

‘தி டார்க் ஹெவன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

“இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். ஏற்கனவே 60 முதல் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்தப் படத்தை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சம்பவம் இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது.

இந்தப் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் தயாரிப்பாளர்கள் சகோதரர் ஷரண் மற்றும் கோபால் சார். அவர்களுடன் என் மனைவி, சகோதரர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் என பலரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர். மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள்.

வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் ஆகியோர் எனக்கு தொடர்ந்து துணையாக இருந்தனர். சித்து, ரித்விகா, தர்ஷிகா ஆகியோர் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்ததுடன், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை பணியாற்றியிருக்கிறார்கள். சித்து என்னுடன் மினி டூர் போலவே தொடர்ந்து பயணித்து பணியாற்றினார்.

என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்கு மிகப்பெரிய நன்றி. எனது முதல் படத்திலும், அடுத்த படத்திலும் அவர்தான் ஒளிப்பதிவாளர். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் வெளிப்படையாக பேசிக்கொள்வோம். எவ்வளவு சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு மீண்டும் ஒன்றாக பணியாற்றக்கூடியவர்.

அதேபோல் எடிட்டர் ராஜா ஆறுமுகமும் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். ஏற்கனவே ஒரு நடிகரை வைத்து எடுக்கப்பட்ட படத்தில் தேவையற்ற காட்சிகளை நீக்கி, தேவையான பகுதிகளை மீண்டும் எடுத்து அவற்றுடன் இணைத்து ஒரு புதிய படமாக உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல. அதை அவர் சிறப்பாக செய்தார். அவருக்கு நன்றி.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மூன்றாவது நபராக எங்கள் குழுவில் இணைந்து, தற்போது என் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். இந்தப் படம் வந்தால் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் ஆகிய மூன்று பேருக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று அப்போதே கூறினேன். அதன் பிறகுதான் இயக்குநர் யார் என்று கேட்பார்கள் என்றும் சொன்னேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது.

சக்தி பாலாஜியின் இசையைப் பற்றி பலரும் பாராட்டிப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளராக வருவார் என்று என் இதயத்திலிருந்து சொல்கிறேன்.

சகோதரர் ஷரண், கோபால் சார் ஆகியோர் இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்காது. இந்த மேடையும் அமைந்திருக்காது. படம் வெளியாகுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தபோதிலும், பலரும் நம்பிக்கையுடன் உழைத்தனர். அனைவரும் படத்தின் வெற்றிக்காக பாடுபட்டனர்.

தற்போது படம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பழைய சர்ச்சைகள் குறித்து பேச விரும்பவில்லை. இந்த நிகழ்ச்சி வழக்கமான வெற்றி விழா என்று யாரும் நினைக்கக்கூடாது என்பதற்காகவே இதை ஏற்பாடு செய்தோம். இது ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு.

விரைவில் பெரிய வெற்றியுடன் வசூல் விவரங்களோடு உங்களை சந்திக்கிறோம். பத்திரிகையாளர் காட்சியில் நீங்கள் கொடுத்த கைதட்டல் திரையரங்குகளிலும் தொடர்ந்து ஒலித்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

Share199Tweet125
Admin

Admin

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் II உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

September 8, 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக் 6 இடைத்தேர்தல்

September 7, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
“மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவையொட்டி பொது விடுமுறை!”

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

October 6, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

செவிலியர்கள் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 6, 2026
ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

ஒவ்​வொரு படத்​துலயும் கஷ்டப்பட்டு​தான் நடிக்கிறேன்!

October 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.