ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
குறிப்பாக, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து, பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வித்யா ராம்ராஜை வரவழைத்த நடிகர் ரஜினிகாந்த், அவரது சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் தனுஷும் வித்யா ராம்ராஜை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். விளையாட்டுத் துறையில் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.





















