கோவை கணபதியைச் சேர்ந்த டாக்டர் திரு. மணிகண்டன் அவர்கள், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் “இளைஞர் தலைமைத்துவம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, “International Youth Diplomacy Speaker” என்ற சர்வதேச விருதைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், பல்வேறு நாடுகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று, இதுவரை 6 சர்வதேச விருதுகளைப் பெற்று, நமது தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களது திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் சர்வதேச அரங்கில் சாதனைகள் படைத்துவரும் தாங்கள், வரும் காலங்களிலும் மேலும் பல உயரங்களை எட்டி, சர்வதேச விருதுகளைக் குவித்து நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்க மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்





















