ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதல் (Pole Vault) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள மயிலாடுதுறையைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். பரணிகா 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றுள்ளார்;
அவர் தனது X தளப் பதிவில், “கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பால் இந்தச் சாதனையைப் படைத்த பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகள். அவரது சாதனைப் பயணம் தொடர்ந்து, மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.





















