தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை லோக் பவனில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழக ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
கடந்த ஏழு மாதங்களாக அவர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்தார்.இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை லோக் பவனில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆளுநர் அர்லேகருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
2கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் இல்லாத நிலையில், தற்போது ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





















