தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற இருந்த தனியார் பேருந்துகளின் ஒருநாள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான மானியத்தை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, செப்.30 வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.தங்கராஜ் இன்று (செப்.29) அறிவித்துள்ளார்





















