பத்திரிகை உலகின் விடிவெள்ளியாகவும், கல்வி மற்றும் விளையாட்டு உலகின் மாபெரும் சிற்பியாகவும் திகழ்ந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், அவரை போற்றி வணங்குகிறேன் என எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தினத்தந்தி நாளிதழ் வாயிலாக நாட்டு நடப்புகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்து, அடித்தட்டு மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கி, தமிழ்ச் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
கல்வி நிறுவனங்கள் வாயிலாக கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றியதுடன், விளையாட்டுத் துறையில் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்து, அதன் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர்.
பத்திரிகை, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் தனித்துவமான தடம் பதித்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.





















