தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நாளை (அக்டோபர் 10) டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டெல்லியில் உள்ள 57 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூட காவல்துறை பரிந்துரைத்துள்ளது. போராட்டம் காரணமாக டெல்லி செல்லும் சில விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





















