ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஈரான் அணியை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தன. இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் வெற்றியை உறுதி செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் வங்கதேசத்தை 42-21, ஈரானை 37-23, ஜப்பானை 50-25 என்ற கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதியில் நேபாளத்தை 48-24 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு மகளிர் கபடியில் இந்தியா தனது 4-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தியா இதற்கு முன்பு 2010, 2014 மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்தது.





















