ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை காவல்துறை எந்தவித அழுத்தமும் இன்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகக் கூறப்படும் இந்த வழக்கில், விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் கிடைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை உரிய தீவிரத்துடன் அணுக வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த வழக்கில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும், அதை மறைக்கத் துணை நின்றவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சமின்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.





















