உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய செஸ் அணியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு எனது சிறப்பு வாழ்த்துகள்.
மேலும், தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சவிதா ஸ்ரீ, வெள்ளிப் பதக்கம் வென்ற குகேஷ், வெண்கலப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா ஆகியோர் தமிழ்நாட்டிற்கும், தாய்நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் இந்தச் சாதனை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக வீரர்கள் உள்ளிட்ட இந்திய செஸ் அணியினர் தொடர்ந்து சர்வதேச அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைத்து, பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.





















