அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமூக வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கைத் தீயை மூட்டி, சிந்தனைச் சிறகுகளை விரித்து, உயர்ந்த கனவுகளைக் காணச் செய்தவர்!
விண்வெளி மற்றும் அறிவியல் துறைகளில் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர்!
எளிமை, நேர்மை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்து, இளைய தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக விளங்குபவர்!
கனவு காண்பதோடு நின்றுவிடாமல், அந்தக் கனவுகளை நனவாக்க உழைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையை விதைத்தவர்!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று, தேசத்தின் வளர்ச்சிக்காகவும், அறிவியல் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளையும், தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவர்தம் புகழைப் போற்றி வணங்குகின்றேன்.
இவ்வறு அவர் தெரிவித்துள்ளார்





















