கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் மேற்கு பகுதி செயலாளர் சின்னு என்கிற சின்னசாமி அண்மையில் காலமானார். இதையடுத்து, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மறைந்த சின்னசாமியின் குடும்பத்தினருக்கு எஸ்.பி. வேலுமணி தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.





















