சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 9) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.13,815-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.1,10,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,680-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சவரன் விலை ரூ.1.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.





















