சமத்துவத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமூக வலைத்தளத்தில் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்
இந்திய விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், அனைவருக்கும் சம உரிமை கிடைக்கவும் தம் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகநீதிப் போராளியுமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது அளப்பரிய தியாகங்களையும், சமூகநீதிக்காக ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகிறேன்.
அவர் உயர்த்திப் பிடித்த சமத்துவம், சமூகநீதி மற்றும் சகோதரத்துவக் கொள்கைகள் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்





















