சமரச சுத்த சன்மார்க்க நெறியை நிறுவி, பசிப்பிணி நீக்கும் அருமருந்தாய் விளங்கி, அன்பால் அகிலத்தை ஈர்த்த அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று!
“ஆன்மநேய ஒருமைப்பாடு ஒன்றே மனிதகுலத்தை வாழவைக்கும்” என உலகிற்கு எடுத்துரைத்து, சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய பாடுபட்டவர் வள்ளலார்.
எல்லா உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் செலுத்த வேண்டும் என்ற உயரிய கொள்கையை வாழ்நாள் முழுவதும் போதித்த சமூக, சமய சீர்திருத்தவாதி திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் பிறந்தநாளில், அவரது அளப்பரிய சேவைகளையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்













