மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 893 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தொகுதியில் தபால் வாக்கு செலுத்த 931 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 451 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 480 பேர் மாற்றுத்திறனாளிகள். வாக்குகளை வீடுகளுக்கே சென்று பெறுவதற்காக 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் 434 மூத்த குடிமக்கள் மற்றும் 459 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 893 பேர் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 38 பேர் வாக்களிக்கவில்லை. பதிவான தபால் வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















